ஆம்! "இளைஞனே, ஒரு நிமிடம்!" என்ற தலைப்பில் மலங்கரை விளக்கு பதிப்பு OCT 2013 இல் அருட் தந்தை Fr. ஆன்டனி அவர்கள் குறிப்பாக இளைஞர்களுக்காக பகிர்ந்து கொண்ட கருத்துகள் என்னை வெகுவாக கவர்ந்தது. என்னை மட்டும் அல்லாமல் மேலும் பல இளைஞர்களையும் கவர்ந்திருக்கும், உள்மன உந்துதலை ஏற்படுத்தி இருக்கும், என்னாலும் உயர முடியும் என்ற வைராக்கியத்தை ஆணித்தரமாக சுட்டியிருக்கும் என நம்புகிறேன்.
அன்னார் அவர்கள் ஒரு கப்பலை உவமையாக காட்டி விளக்கிய கருத்துகள் ஆழ்ந்த உண்மைகளை கொண்டுள்ளன. ஒரு கப்பல் எப்படி பல இன்னல்களை தாண்டி கடலில் செல்கிறதோ அதே போன்று இளைஞர்களாகிய நாமும் வாழ்க்கை துயரங்கள், கேவலங்கள், கொடுந் தடைகள் ஆகியவற்றை வெறும் முயற்சி மட்டும் இல்லாமல் விடா முயற்சியோடு எதிர்கொண்டு வெற்றி இலக்கை எட்டவேண்டும். மேலும் அவர்கள் கருத்தின் படி, "நம் நண்பர்கள் நம்மை செதுக்குவதை விட நம் பகைவர்கள் நம்மை செதுக்குகிறார்கள்." என்பது மிகவும் சரி, நமக்கு சாதகமானவை நமக்கு கற்பிற்பவைகளை விட பாதகமானவைகளே அதிகம் கற்பிற்கின்றன. மேலும் நாம் அவற்றால் இழந்தவைகளை நினைவூட்டி நம்மை சிந்திக்க வழி வகை செய்கின்றன. இளைஞர்களாகிய நாம் எந்த ஒன்றை சார்ந்து வாழும் ஒருவராக இருக்க கூடாது. சாதகமற்ற சூழல்களையும் வாய்ப்புகளாக மாற்றி அமைத்து கொள்ளவேண்டும்.
இப்படி தான் தாமஸ் அல்வா எடிசன் அவர்கள் பல நூறு முறைகள், பல உலோகங்களை பயன்படுத்தியும் மின்விளக்கின் உதிரியான டங்ஸ்டனை கண்டு பிடிக்க முடியவில்லை. இதை கண்ட அவர் உதவியாளர்க்கு இத்தனை நூறு முறை முயன்றும் முயற்சி அனைத்தும் வீணாகி விட்டதே என்று வருந்தினார். கடைசியில் எடிசன் டங்ஸ்டனை கண்டு பிடித்த பிறகு கூறினார், "நான் இத்தனை நூறு முறைகள் முயன்றது வீணாகவில்லை மாறாக என்னால் இத்தனை நூறு உலோகங்கள் டங்ஸ்டன் உருவாக்க பயன்பட மாட்டாது என்பதை கண்டறியவைத்து விட்டது," என்றார்.
இளைஞனே, சுலபமான வழிகளை பின்பற்றி அடையும் வெற்றியானது நிரந்தரமானதல்ல, விடமுயற்சியுடன் இறுதிவரை போராடி அடையும் வெற்றியே உன்னதமானதும் சாதித்து விட்டோம் என்ற மன நிறைவை கொடுக்கும் ஒன்றாகவும் அமையும்.
"முனைவோம் சாதிப்போம்."
அன்புடன்,
தா. ஜாண் ரோஜர்
No comments:
Post a Comment