அன்றய தினம் இனிதே தொடங்கியது. மத்தியாஸ் நகர் மற்றும் முக்கடல் ஆகிய அலகுகளை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படி மறைவட்ட MCYM குழுவிலிருந்து திரு. ஜாண் ரோஜர், திரு. டென்சின் ராஜ், திரு. மனோகர் மற்றும் திரு. அன்டோ ரூபன் ஆகியோர் முதலாவதாக மத்தியாஸ் நகர் சென்றடைந்தோம். அங்கே சற்று நேரம் MCYM மற்றும் MCYM தினம் குறித்து கலந்துரையாடினோம். பின்னர் அலகு அளவிலான கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தோம்:
தலைவர்: திரு. ஜாண்
துணை தலைவர்: திரு. மணிகண்டன்
செயலர்: திருமதி. ப்ரியாமணிகண்டன்
பொருளாளர்:செல்வி. சுகந்தி
இதனை தொடர்ந்து முக்கடல் நோக்கி பயணித்தோம். அங்கும் MCYM குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். பின்னர் அலகு பொறுப்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்தோம். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தோம்:
தலைவர்: திரு. முரளி
செயலர்: செல்வி. மார்கரெட்
பொருளாளர்: திரு. விஜய்
No comments:
Post a Comment