நானும் அவனும் ஒன்றாய்ப் படித்தோம்,
என்னில் அவனையும் அவனில்
என்னையும் பார்த்துப் பார்த்துப் பூரித்தோம்…….
கிளைகளில் தாவி கிணற்றில் குதித்து
ஆற்று மணலில் ஆட்டம் போட்டோம்
காலமும் நானும் வேகமாய் வளர்ந்தோம்
ஒரே ஒரு கேள்விக்குப் பதில் தந்து
பட்டுப் போனது எங்கள் பத்து வருட பந்தம்
பதில் என்னவோ சரியாத்தான் சொன்னேன்…
என்னில் அவனையும் அவனில்
என்னையும் பார்த்துப் பார்த்துப் பூரித்தோம்…….
கிளைகளில் தாவி கிணற்றில் குதித்து
ஆற்று மணலில் ஆட்டம் போட்டோம்
காலமும் நானும் வேகமாய் வளர்ந்தோம்
ஒரே ஒரு கேள்விக்குப் பதில் தந்து
பட்டுப் போனது எங்கள் பத்து வருட பந்தம்
பதில் என்னவோ சரியாத்தான் சொன்னேன்…
கேள்விதான்
“நீ என்ன சாதி?”
(சாதீயத்தின் அணையாத நெருப்பு இன்னும் மனிதத்தை கூறுபோடத் துடிப்பதை வாழ்வின் பல்வேறு நிலைகளில் கண்டபோது ஆற்றமாட்டாமல் பிறந்த கவிதை)
No comments:
Post a Comment